கடந்த 2004ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் 62 வயதில் சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்று உலக அளவில் அதிக வயதில் சோதனைக்குழாய் குழந்தை பெற்ற பெண் பட்டியலில் மூன்றாவது இடத்தை பெற்றார். 
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
									
										
								
																	
	 
	இந்த நிலையில் 62 வயதில் சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்று சாதனை புரிந்த பவானியம்மா என்ற பெண் நேற்று உடல்நலக்கோளாறு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வ்யது 76
 
									
										
			        							
								
																	
	 
	பவானியம்மாவுக்கு சோதனைக்குழாய் மூலம் பிறந்த குழந்தை ஒருசில மாதங்களில் இறந்துவிட்டதால் தனிமையில் பொழுதை கழித்த அவர், மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.