Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்தடுத்து ஆறு கொலைகள்!: கேரளாவை அலறவைத்த பெண் சைக்கோ கில்லர்!

Advertiesment
அடுத்தடுத்து ஆறு கொலைகள்!: கேரளாவை அலறவைத்த பெண் சைக்கோ கில்லர்!
, செவ்வாய், 8 அக்டோபர் 2019 (14:30 IST)
தன் குடும்பத்தை சேர்ந்தவர்களையே அடுத்தடுத்து கொடூரமான முறையில் கொலை செய்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலம் கூடத்தாயி கிராமத்தை சேர்ந்தவர் ஜாலி. பெயருக்கேற்றவாறே ஜாலியாக பழகும் இந்த பெண் தேசிய தொழில் நுட்ப கல்லூரியில் படித்தவர். தற்போது பெண்கள் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இவரது முதல் கணவர் ராய் தாமஸ் 2011ன் ஆண்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்த விசாரணையில் அவர் சயனைட் கலக்கப்பட்ட உணவை உண்டதாக தெரிய வந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று எண்ணப்பட்டு வந்தது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வந்தபோது ஜாலிதான் தன் நண்பர்கள் உதவியுடன் ராய் தாமஸ் உணவில் சயனைட் கலந்து கொலை செய்தார் என்பது தெரிய வந்தது. 8 வருடங்கள் கழித்து குற்றம் கண்டறியப்பட்டு ஜாலி கைது செய்யப்பட்டார். அதற்கு பிறகுதான் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வந்துள்ளன.

ராய் தாமஸ் இறந்து போகும் முன்னரே அவரது தாய், தந்தையர் இறந்து விட்டிருக்கின்றனர். அதுவும் எந்த விதமான உடல் கேடும் ஏற்படாமலே இறந்திருக்கிறார்கள். அதுப்போல தொடர்ந்து அவர்களது உறவினர்கள் சிலரும் சேர்த்து மொத்தம் 6 பேர் குறிப்பிட்ட சில வருடங்களில் இறந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாரையும் கொன்றது ஜாலிதான் என தெரிய வந்ததும் போலீஸார் பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஜாலியின் நெருங்கிய வட்டார நண்பர்களுக்கே இது அதிர்ச்சியாக இருந்துள்ளது.

கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த ஜாலி ஞாயிற்றுக்கிழமையானால் தவறாமல் சர்ச்சுக்கு போகும் பழக்கம் உடையவர். நண்பர்களுடன் மிகவும் கனிவாகவும், அன்பாகவும் பழக கூடியவர் என அவர் நண்பர்களே கூறியுள்ளனர்.

ஜாலி அவரது மாமியார் அன்னம்மா தாமஸை 2002ல் சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்திருக்கிறார். பிறகு சில வருடங்கள் அமைதி காத்த அவர் 2008ல் தனது மாமனார் டாம் தாமஸை விஷம் வைத்து கொன்றிருக்கிறார். 2011ல் தனது கணவர் ராய் தாமஸையும், 2014ல் அன்னம்மாவின் தம்பி மேத்யூஸையும் கொலை செய்திருக்கிறார். பிறகு நீண்ட நாள் தனிமையில் வாழ்ந்த ஜாலி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். அதன்படி ஷாஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஷாஜுவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருந்தது. ஆனால் அவரும் அவரது மனைவியும் விவாகரத்து பெற்று கொண்டனர். அதனால் அவர் ஜாலியை திருமணம் செய்து கொண்டார். ஷாஜுவின் முதல் மனைவியையும் விட்டு வைக்கவில்லை ஜாலி. ஷாஜுவின் முதல் மனைவி சிலியையும், அவரது ஒன்றரை வயது குழந்தையையும் இரக்கமின்றி கொன்றிருக்கிறார் ஜாலி.

ஜாலி இப்படி பலரை கொடூரமாக கொன்றதற்கு எந்தவிதமான பெரிய காரணங்களும் இருக்கவில்லை. அதனாலேயே பெரும்பாலும் போலீஸுக்கு இவர்மேல் சந்தேகம் ஏற்படவில்லை. அதை தனக்கு சாதகமாக கொண்டு பல உயிர்களை பலி கொண்டிருக்கிறார் ஜாலி. அவர் இந்த கொலைகளை மிகவும் விரும்பி செய்திருப்பதாக கூறப்படுகிறது. தொடர் கொலைகளை செய்த பெண் சீரியல் கில்லர் சம்பவம் கேரளாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீன நிறுவனங்களை தடை செய்த அமெரிக்கா!