Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்கிக்குள் ஹெல்மெட் அணிந்து வந்து கொள்ளை! – சிசிடிவி காட்சிகள் வெளியானது!

Advertiesment
வங்கிக்குள் ஹெல்மெட் அணிந்து வந்து கொள்ளை! – சிசிடிவி காட்சிகள் வெளியானது!
, திங்கள், 7 அக்டோபர் 2019 (16:22 IST)
ஐசிஐசிஐ வங்கிக்குள் ஹெல்மெட் அணிந்து கொண்டு நுழைந்த திருட்டு கும்பல் 8 லட்ச ரூபாய்க்கும் மேல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முசாஃபர்நகர்ரில் ஐசிஐசிஐ வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வங்கிக்குள் ஹெல்மெட் அணிந்து கொண்டு 6 பேர் நுழைந்திருக்கிறார்கள். காவலாளிகளிடம் இருந்த துப்பாக்கிகளை பிடுங்கி கொண்ட அவர்கள் உள்ளே சென்று அதை வைத்து மிரட்டி பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். அதில் 3 பேர் 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூரத்தில் மோடி முகமூடி அணிந்து நடனம்! – வைரலான வீடியோ!