சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து இன்று செய்தி வாசிப்பாளர் கவிதா உள்பட இரண்டு பெண்கள் பலத்த போலீஸ் காவலுடன் ஐயப்பன் சன்னிதானத்தை நெருங்கிவிட்டனர். ஆனால் அவர்கள் இருவரையும் திருப்பி அனுப்ப தேவசம் போர்டு மற்றும் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறியுள்ள பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'ஐயப்பன் கோயிலின் பன்னெடுங்காலமாக பழக்கப்பட்டுவரும் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு...பெண்பாடு முக்கியமில்லை, பழக்கப்பட்டுவரும் பண்பாடுதான் முக்கியம். இது மூடநம்பிக்கையல்ல, முடிவான நம்பிக்கை. இது தீர்க்கக்கூடிய..நம்பிக்கையல்ல, தீர்க்கமான தீவிரமான நம்பிக்கை என்று கூறியுள்ளார்,.
இந்த நிலையில் சன்னிதானத்தின் அருகே வரை சென்ற இரு பெண்களை கேரள அரசும், தேவசம் போர்டும் திருப்பி அனுப்ப முடிவு செய்ததை எதிர்த்து பல பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன