ஆந்திராவில் திருமணத்துக்கு மறுத்த காதலனைக் காதலி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த காதல் ஜோடி தாத்தாஜி நாயுடுவும் பவாணியும். இவர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இந்த காதலுக்கு தாத்தாஜியின் வீட்டில் பலமான எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து தாத்தாஜி தனது வீட்டில் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்ய ஒப்புக்கிண்டுள்ளார். இதையறிந்த பவாணி அவர் மேல் கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் இருவரும் வழக்கம் போல சந்தித்துக்கொண்ட போது இது சம்மந்தமாக கடுமையான வாக்குவாதம் எழுந்துள்ளது. இதையடுத்து பவாணியை அவரின் வீட்டில் இறக்கிவிட்ட போது மறைத்து வைத்திருந்த கத்தியால் தாத்தாஜியை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துள்ளார். இதையடுத்து பவாணியை கைது செய்த போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.