ஹரியானா மாநிலத்தில் பொழுதுபோக்கு பூங்காவில் சிறிய ரேஸ் கார் சக்கரத்தில் பெண் ஒருவரின் தலை முடி சிக்கியத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் பதிண்டா பகுதியை சேர்ந்த புனீத் கவுர் என்ற பெண் தனது குடும்பத்தினருடன் விடுமுறையை ஒட்டி பிஜ்னோரில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்றுள்ளார். அங்கு இருந்த கோ-கார்ட் எனப்படும் சிறிய அளவிலான ரேஸ் காரில் பயணம் செய்துள்ளார்.
பயணத்தை துவங்கிய சிறிது நேரத்தில் புனீத்தின் தலை முடி காரின் சக்கரத்தில் எதிர்பாராத விதமாக சிக்கியது. கார் சற்று வேகமாக சென்றதால் அவரால் முடியை எடுக்க முடியவில்லை. பின்னர் அவரது அலறல் சத்தம் கேட்டு கார் நிறுத்தப்பட்டது.
ஆனால், அதற்குள் அவரது முடியுடன் தலையின் தோல் பகுதியும் பெயர்ந்து வந்தது. ரத்த வெள்ளத்தில் வீழ்ந்த புனீத்தை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் அதற்குள் இறந்துவிட்டார்.
இந்நிலையில், அந்த பூங்கா உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என புனீத்தின் குடும்பத்தினர் வலியுறுத்தினர். மேலும், ஹெல்மட் அணிந்திருந்தும் புனீத்தின் முடி சக்கரத்தில் சிக்கி அவர் உயிரிழந்த்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.