அரியானா மாநிலத்தில் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 8 பியூன் வேகைக்கு 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள ஐகோர்ட்டில் 8 பியூன் பணி இடங்கள் காலியாக உள்ளன. இதற்கு சுமார் 15ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த பணிக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.
ஆனால் இந்த பணிக்கு விண்ணப்பித்தவர்களில் 90% பேர் பட்டதாரிகள். 15,000 பேரில் 8 பேரை தேர்வு செய்ய கடந்த 4ஆம் தேதி இதற்கான நேர்முக தேர்வு நடைபெற்றுள்ளது. பியூன் பணிக்கு இத்தனை பேர் விண்ணபிக்க காரணம் குறைந்தபட்ச சம்பளமாக ரூ.17,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள நிலையில் பெரும்பாலானோர் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை தேடி செல்வதில்லை. எந்த பணிக்கு சம்பளம் கூடுதல் என்பதையே கணக்கில் கொண்டு வேலை தேடி வருகின்றனர்.