உத்தர பிரதேசத்தில் குட்கா பழக்கத்திற்கு அடிமையான பெண் ஒருவர் கணவன் பணம் தராததால் குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குட்கா பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். நாளுக்கு நாள் அவரது குட்கா பழக்கம் அதிகரித்த நிலையில் ஒரு சமயத்தில் பெண்ணின் கணவர் அவருடன் சண்டை போட தொடங்கியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னதாக சண்டை தீவிரமடைந்த நிலையில் குட்கா வாங்குவதற்கு பணம் தர மறுத்த கணவன், குழந்தைகள் முன்னால் குட்கா சாப்பிடுவதை நிறுத்துமாறு மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி, தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்ததுடன், தானும் விஷம் அருந்தியுள்ளார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட மூவருமே பலியானார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K