உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பங்கார்மாவு தொகுதி எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரை கட்சியிலிருந்து நீக்கி பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பங்கார்மாவு தொகுதி எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார், ஒரு சிறுமியை பலையல் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழ்நுதது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் குல்தீப்பை கைது செய்தனர். இது நாட்டில் மிகப் பெரும் விவாத்தத்தை எழுப்பி பேசு பொருளானது.அதன் பின்னர் பாஜக விலிருந்து சஸ்பெஸ்ண்ட் செய்யப்பட்டார்.
இதனையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினர்கள் , வழக்கறிஞர்களுடன் ஒரு வாகனத்தில் ரேபாரேலியில் உள்ள உறவினர்களைச் சந்திக்கச் சென்ர சமயத்தில் வேகனமாக வந்த ஒரு லாரி அவர்களின் காரின் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுமி படுகாயம் அடைந்ததால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனைத்தொடர்ந்து சிறுமி மீதான பலாத்கார வழக்கு மற்றும் விபத்து ஏற்படுத்திய வழக்குககள் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ செங்கார் உள்ளிட்ட 10 பேர் மிது சிபிச்சி வழக்குப் பகுதி செய்தனர். சிறுமியின் பாலியல் விவகாரம் பார்லிமெண்டிலும் எதிரொலித்தது. காங்கிரஸ் கட்சி மற்றும் முக்கிய எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து பாஜகவுக்கு அழுத்தம் ப் தரப்பட்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் சிறுமியை பலாத்தாகாரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பங்கார்மாவு தொகுதி எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரை தற்போது பாஜக தலைமை கட்சியை விட்டு நீக்கி உத்தரவிடுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.