Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செருப்பால் அடிப்பேன்… செருப்பை தூக்கி காட்டி பவன் கல்யாண் சர்ச்சை!

செருப்பால் அடிப்பேன்… செருப்பை தூக்கி காட்டி பவன் கல்யாண் சர்ச்சை!
, புதன், 19 அக்டோபர் 2022 (13:06 IST)
செருப்பால் அடிப்பேன் என நடிகரும் அரசியல் தலைவருமான பவன் கல்யாண் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திராவுக்கு மூன்று தலைநகரம் அமைக்க வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு, 'விசாக கர்ஜனை’ என்ற பெயரில் விசாகப்பட்டினத்தில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி பிரமாண்ட பேரணி நடத்தினர். அப்போது நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினர் ஒய்.எஸ்.ஆர்.சி.பி தாக்குதல் நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து  ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியினர் பவன் கல்யாண் மற்றும் கட்சியினரை கடுமையாக சாடி வருகின்றனர். குறிப்பாக நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சியை பாஜகவிடம் பணம் வாங்கி நடத்தி வருவதாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.
ALSO READ: ஜெகனை எதிர்க்க கைக்கோர்க்கும் சந்திரபாபு நாயுடு - பவன் கல்யாண்?
இதனை கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, 'மற்ற கட்சிகளிடம் இருந்து பணம் வாங்கி கொண்டு கட்சி நடத்துகிறேன் என என்னை சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன் என  கூறி கீழே குனிந்து தனது செருப்பை எடுத்து காட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

ஜெகன் ரெட்டியின் கட்சித் தலைவர்கள் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவரின் வருமான ஆதாரங்களைக் கேள்விக்குள்ளாக்கியதாலும் ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கைகோர்த்து செயல்படுவதாகவும் அவர் ட்ரோல் செய்யப்பட்டதாலும் இந்த வெளிபாடு பவண் கல்யாணிடம் இருந்து வந்துள்ளது என பேச்சு.

Edited By: Sugapriya Prakash

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக சட்டமன்றம் ஒரு அறிவாலயமாக செயல்படுகிறது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஆவேசம்