அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏழு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் வக்பு சட்ட திருத்த மசோதா பாஜகவுக்கு பாதிப்பா அல்லது சாதகமாக இருக்குமா? என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கும் கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், பீகார், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் என ஏழு மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதில் இமாச்சலப் பிரதேசத்தை தவிர மற்ற அனைத்தும் பெரிய மாநிலங்கள் என்பதால், இந்த தேர்தல் முடிவுகளை நாடு எதிர்பார்த்து காத்திருக்கிறது.
இந்த நிலையில், வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இதனால் பாஜகவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம்களின் வாக்குகள் பெரும்பாலும் பாஜகவுக்கு இருக்காது என்பதால், “இந்த மசோதா திருத்தத்திற்குப் பின்னரும் அதே நிலை தான் தொடரும்; எனவே பெரிய அளவில் பாதிப்பு இருக்காது” என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது சதவீத முஸ்லிம்களில் பெரும்பாலோர் திமுக கூட்டணிக்கு வாக்களிக்கின்றனர். சிலர் மட்டும் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்கின்றனர். வரும் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைந்தால், அந்த சில சதவீத வாக்குகளே இழப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், முத்தலாக் தடைச் சட்டம் போலவே வக்பு வாரிய சட்ட மசோதாவும் முஸ்லிம்களுக்கு பலன் ஏற்படுத்தும் மசோதா எனக் கருதலாம். ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தால் ஏற்படும் நன்மைகளை புரிய வைக்க பாஜக முயற்சிக்கும், என்றும் கூறப்படுகிறது.