நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ் வி சேகர் பாஜகவில் இருந்து விலகப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகர் எஸ் வி சேகர் இதுவரை சேர்ந்து வெளியேறாத கட்சிகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லாக் கட்சிகளிலும் சிலகாலம் இருந்திருக்கிறார். தற்போது அவர் பாஜகவில் இருக்கிறார். அவ்வப்போது ஏதாவது சர்ச்சைக்குரிய வகையில் பேசி நீதிமன்ற வழக்குகளை சந்திப்பார். சமீபத்தில் தேசிய கொடியை அவமானப்படுத்திய வழக்கில் மன்னிப்பு கேட்டு தப்பித்தார்.
இந்நிலையில் அவருக்கு தமிழக மாநில பாஜக மேல் அதிருப்தி இருப்பதாகவும், அதனால் கட்சியை விட்டு விலகுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.