Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா.? டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!

Senthil Velan
வியாழன், 30 மே 2024 (12:49 IST)
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் வழங்க கோரி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது
 
நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு இந்த மனுவை விசாரித்தது. தேர்தலை முன்னிட்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த 10-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் அவருக்கு ஜுன் 1-ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது. 
 
இதனிடையே மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும் ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை நாடலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. 

ALSO READ: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்..! கூடுதலாக 57 பேரை நியமித்தது தேர்தல் ஆணையம்..!!
 
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவொற்றியூர் பள்ளியில் வாயுக்கசிவு விவகாரம்: மாணவிகளின் நாடகமா?

நாடு முழுவதும் மாணவ, மாணவிகளுக்கு தனி அடையாள அட்டை.. பணிகள் தொடக்கம்..!

தமிழகத்தை நெருங்குகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு: 17 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

நுண்ணுயிர்களின் அழிவு அனைத்து உயிர்களுக்குமான மரண எச்சரிக்கை! - COP-29 மாநாட்டில் சத்குரு பேச்சு!

அமரன் சர்ச்சை: முகுந்த் போர் குற்றவாளின்னு நான் சொல்லல.. இயக்குனர் அப்படி காட்டியிருக்கார்! - திருமுருகன் காந்தி விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments