Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்ப் அதிபர் ஆனால், எலான் மஸ்க் முக்கிய பதவி பெறுகிறாரா? பரபரப்பு தகவல்..!

Siva
வியாழன், 30 மே 2024 (12:47 IST)
அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ள நிலையில் அவர் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டு வருகிறது .

இந்த நிலையில் டிரம்ப் அதிபர் ஆனால் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அதிபரின் ஆலோசகர் பதவியை பெறுவார் என்றும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக அமெரிக்காவின் முக்கிய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பலமுறை இருவரும் செல்போன் மூலம் உரையாடியுள்ள நிலையில் சமீபத்தில் நேரில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் எல்லை பாதுகாப்பு கொள்கைகள், பொருளாதாரம் உள்ளிட்ட ஆலோசனையை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று அதிபர் ஆனால் அவருடைய ஆலோசகராக எலான் மஸ்க் நியமனம் செய்யப்படுவார் என்று கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த செய்தியை டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகிய இருவருமே மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயக கட்சியின் வேட்பாளரான மீண்டும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தேர்தலில் போட்டியிட இருக்கும் நிலையில் குடியரசு கட்சியின் வேட்பாளராக ட்ரம்ப் போட்டியில் உள்ளதால் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி.!!

மீண்டும் தங்கம் விலை 500 ரூபாய் உயர்ந்ததா? சென்னையில் இன்றைய நிலவரம்..!

ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கல் தான் ஆம்ஸ்ட்ராங் கொலையா? தீவிர விசாரணை..!

அமித்ஷாவுடன் திமுக எம்பி திருச்சி சிவா திடீர் சந்திப்பு.. என்ன காரணம்?

ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து தவெக தலைவர் விஜய் கண்டனம்.. என்ன சொன்னார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments