Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமராவதி திட்டம் அவ்வளவுதானா? திடீரென வெளியேறிய சிங்கப்பூர் நிறுவனம்

அமராவதி திட்டம் அவ்வளவுதானா? திடீரென வெளியேறிய சிங்கப்பூர் நிறுவனம்
, வெள்ளி, 15 நவம்பர் 2019 (07:30 IST)
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம், ஆந்திரா, தெலுங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டபோது, ஆந்திராவின் தலைநகரம் ஐதராபாத், தெலுங்கானாவுக்கு சென்றது. இதனையடுத்து ஆந்திராவுக்கு என ஒரு தலைநகர் வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமராவதி என்ற நகரையே உருவாக்க முடிவு செய்தார். இதற்கான கட்டுமானத்திற்கு சிங்கப்பூர் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய அமராவதி நகரத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த சிங்கப்பூரைச் சேர்ந்த கட்டுமான குழுவினர் அங்கிருந்து திடீரென வெளியேறிவிட்டதால் அமராவதி நகரம் அவ்வளவுதானா? என்ற கேள்வி எழுந்துள்ளது
 
இப்போதைக்கு தமது அரசுக்கு அமராவதி நகரம் முக்கியமல்ல என்றும் மக்களின் அடிப்படை தேவைகளை தீர்ப்பதுதான் தனது முதல் கடமை என்று முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளதை அடுத்து அமராவதி திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிங்கப்பூர் நிறுவனம் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது
 
இதுகுறித்து சந்திரபாபு நாயுடு கூறியபோது, ‘கனவுகள் சிதைந்து, நம்பிக்கை பொய்த்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஆந்திர அரசு மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழிற்சாலைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருவதாக பதிலடி கொடுத்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமாவளவன் மீது காவல் நிலையத்தில் புகார்!