Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவி வேறு நபருடன் உல்லாசம்.. கோபத்தில் குடும்பத்தையே கொன்று கணவன் தற்கொலை!

Advertiesment
crime
, திங்கள், 20 நவம்பர் 2023 (16:09 IST)
மேற்கு வங்கத்தில் தனது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததால் கணவன் குடும்பத்தையே கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மேற்கு வங்க மாநிலம் பர்கானாஸ் மாவட்டம் கர்தா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் 52 வயதான பிருந்தாபன் கர்மாகர். துணி வியாபாரியான இவருக்கு தேபஸ்ரீ என்ற மனைவியும், டெபலீனா என்ற மகளும், உத்சாஹா என்ற மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களாக பிருந்தாபன் வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்த நிலையில் துர்நாற்றமும் வீச தொடங்கியுள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பூட்டை உடைத்து போலீஸார் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பிருந்தாபன், தேபஸ்ரீ மற்றும் அவரது மகன் மற்றும் மகள் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். அதில் பிருந்தாபன் மட்டும் தூக்கில் தொங்கியிருந்துள்ளார்.

உடனடியாக அவர்களது உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸார் வீட்டில் சோதனை நடத்தியபோது பிருந்தாபன் எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. அதில் தனது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், அதை தாங்கி கொள்ள இயலாததால் இந்த முடிவை எடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி கள்ளத்தொடர்பு காரணமாக மொத்த குடும்பத்தையே விஷம் வைத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட பிருந்தாபனின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமான நிலையத்தில் பறந்த மர்ம பொருள்? தேடுதல் பணியில் ரஃபேல் விமானங்கள்!