உலகம் முழுவதும் இன்றைய சூழலில் செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. சிறு குழந்தைகள் முதல், முதியோர் வரை அனைவருக்கும் சமூக வலைதளங்கள் பயன்பாடு, அதில் உள்ள ரீல்ஸ் ஆகியவற்றி தங்கள் திறமைகள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரீல்ஸ் ஆசையில் ஐபோன் வாங்குவதற்காக 8 மாதக் குழந்தையை விற்றுள்ளனர் ஒரு தம்பதியர்.
மேற்குவங்கத்தில் உள்ள வடக்கு பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த ஷதி, ஜெயதேவ் தம்பதியர், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடும் ஆசையில், தங்களின் 8 மாதக் குழதையை விற்றுள்ளணர். இதுபற்றி தகவல் அறிந்த போலீஸார், குழந்தையின் தாய் மற்றும் குழந்தையை வாங்கிய பிரியங்கா கோஷ் என்ற பெண் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர். இப்போது,குழந்தையின் தந்தையை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.