கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

Mahendran
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2025 (17:07 IST)
மத்தியப் பிரதேச மாநிலத்தில், புதிதாகத் திருமணம் ஆன பெண் ஒருவர், மதுபோதையில் தனது கணவர் சூடான கத்தியால் உடலில் சூடு வைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மத்தியப் பிரதேச மாநிலத்தில் திலீப் என்பவர் மதுபோதையில் இருந்தபோது, கத்தியை சூடாக்கி அவருடைய மனைவி குஷ்புவின் உடல் முழுவதும் சூடு வைத்துள்ளார். இந்த கொடூரமான செயலுக்கு பிறகு, அவர் மீண்டும் குஷ்புவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. 
 
இச்சம்பவம் குறித்து அறிந்த குஷ்புவின் சகோதரர், அவரை மீட்டு தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், குஷ்புவை கார்கோன் மைன்கான் காவல் நிலையத்தில் ஒப்படைத்த பிறகு, அவர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஜெய்தாப்பூர் காவல் நிலையத்தின் பெண் துணை ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளார்.
 
வரதட்சணை கேட்டு கணவனே மனைவிக்கு சூடு வைத்த நிலையில், திலீப் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

செங்கோட்டையன் சொன்னது உண்மையா?!.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!..

வெறும் பென்சிலை வைத்து சுவரில் ஓட்டை போட்ட நபர்.. சுவர் அவ்வளவு பலவீனமா?

குண்டு வெடிப்புக்கு பின் 3 முறை போன் செய்தேன்.. பதிலில்லை: 26 வயது மகனை இழந்த தந்தை உருக்கம்.!

குழந்தை பெற்று டிஸ்சார்ஜ் ஆன பெண் உயிரிழப்பு.. சிறப்பு விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments