ஹைதராபாத்தில் கட்டாய மதமாற்றம் தொடர்பாக ஒரு பெண் புகார் அளித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து லங்கர் ஹவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் பி. வெங்கட் ராமுலு கூறுகையில், "கீர்த்தி என்ற பெண்மணி அளித்த புகாரின் பேரில், நாங்கள் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளோம். 2006ஆம் ஆண்டு ஒரு இந்து மதத்தைச் சேர்ந்தவரை அவர் திருமணம் செய்துள்ளார். 2016ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். விவாகரத்துக்கு பிறகு, ஃபவாஹ் என்ற நபருடன் கீர்த்திக்கு காதல் உறவு ஏற்பட்டு, பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின்போது அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகவும் தெரிவித்துள்ளார்" என்றார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக கீர்த்திக்கும், அவரது கணவர் ஃபவாஹ்வுக்கும் இடையே உறவு சீராக இல்லை என்றும், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், தனது 2வது கணவர் ஃபவாஹ், ஜாபீன் ஃபாத்திமா என்ற மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும், இது 'லவ் ஜிஹாத்' என்றும் கீர்த்தி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.