குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்களை சேர்க்காதது ஏன்? என சுபாஷ் சந்திர போஸின் பேரனுமான சந்திர குமார் போஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இல்லை என எதிர்கட்சிகளும் பல அமைப்புகளும் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்களை சேர்க்காதது ஏன்? என மேற்குவங்க பாஜக துணை தலைவரும், சுபாஷ் சந்திர போஸின் பேரனுமான சந்திர குமார் போஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், குடியுரிமை சட்டம் மதத்தின் அடிப்படீல் திருத்தப்பட்டதல்ல என்றால் அதில் இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், கிறிதுவர்கள், பார்சிகள், ஜெயின்கள் உள்ளடக்கப்பட்டு இஸ்லாமியர்கள் மட்டும் விடப்பட்டது ஏன் என கேட்டுள்ளார்.