Publish Date: Tue, 24 Dec 2019 (09:15 IST)
Updated Date: Tue, 24 Dec 2019 (09:19 IST)
கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாக மாநில ஆட்சிகளை பாஜக இழந்துள்ளது.
2017 நிலவரப்படி இந்தியாவின் மொத்த பரப்பளவில் 71 % பாஜக மாநில ஆட்சியில் இருந்தது. ஆனால் இப்போது அந்த சதவீதம் கணிசமாக குறைந்துள்ளது.
அதாவது தற்போது 34 சதவீதமாக் குறைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் ராஜஸ்தான், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தோல்வியை கண்டுள்ளது. தற்போது ஜார்கண்டிலும் தோல்வியை கண்டுள்ளது. இதனால் பாஜகவின் சாம்ராஜ்யம் சரிகிறதா என பலரும் விமர்சித்து வருகின்றனர்.