மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த விவசாய மசோதாவிற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என தெரிந்துக்கொள்ளுங்கள்...
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த விவசாய மசோதாவிற்கு எதிராக பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் அவர்கள் விடாமல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் எதிர்வரும் 3ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்திருந்தது. அதற்கு முன்னதாக இன்று பிற்பகல் 3 மணியளவில் விக்யான் பவனில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் டோமர் விவசாய சங்கங்களிடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.
விவசாயிகள் இந்த போராட்டத்தை கையில் எடுக்க இந்த மசோதாவில் உள்ள சில ஓட்டைகளே காரணம். அதாவது,
விவசாயத்துறையில் அந்நிய முதலீட்டை பெற சட்டதிருத்தம் செய்து கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிப்பதாக புகார்.
வேளாண் சட்டத்தால் பெரு விவசாயிகள் அதிகளவில் உணவுப்பொருள்களை பதுக்க வாய்ப்பு.
விளை பொருள் சந்தைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுப்படுத்தும் சூழல் உருவாகும் என விவசாயிகள் அச்சம்.