Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்வர் நாற்காலி எங்களுக்குத்தான்: சிவசேனா பிடிவாதத்தால் பாஜக அதிருப்தி

முதல்வர் நாற்காலி எங்களுக்குத்தான்: சிவசேனா பிடிவாதத்தால் பாஜக அதிருப்தி
, புதன், 9 அக்டோபர் 2019 (09:40 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி ஏற்படுமா? ஏற்படாதா? என்ற இழுபறி இருந்த நிலையில் ஒருவழியாக இருதரப்பினர்களும் சமாதானமாக பேசி கூட்டணியை இறுதி செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக 150 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இருப்பினும் இந்த கூட்டணி வெற்றி பெற்றால் யார் முதல்வர் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே வொர்லி தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்முறையாக பால்தாக்கரே குடும்பத்தில் இருந்து ஒருவர் போட்டியிடுவதால் அவரை முதல்வராக்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் தீவிர முயற்சியில் உள்ளனர். ஆனால் தனிப்பெரும்பான்மை பெற்று மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளது

இந்த நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் தசரா ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, ‘முதல்வர் நாற்காலியில் சிவசேனா அமரும் என்றும், கூட்டணி தர்மத்தை கடைபிடிப்பதால் அடக்கி வாசிப்பதாகவும், எங்களுக்கு தேர்தலில் வெல்வதை விட அமைச்சரவையில் எங்கள் கொடி உயரப் பறக்க வேண்டும் என்பதுதான் இலக்கு என்றும் பேசியுள்ளார். சஞ்சய் ரவுத்தின் இந்த பேச்சு பாஜகவினர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழிசை இடத்தை பிடிப்பாரா வானதி? தலைமையின் கடைக்கண் பார்வை படுமா?