Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழிசை இடத்தை பிடிப்பாரா வானதி? தலைமையின் கடைக்கண் பார்வை படுமா?

Advertiesment
தமிழிசை இடத்தை பிடிப்பாரா வானதி? தலைமையின் கடைக்கண் பார்வை படுமா?
, புதன், 9 அக்டோபர் 2019 (09:34 IST)
தமிழக பாஜக தலைவர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், வானதி ஸ்ரீனிவாசன் வழக்கத்திற்கு மாறாக பொதுவெளியில் காணப்படுகிறார். 
 
பாஜக சார்பில் தொலைக்காட்சி பேட்டிகளில் இடம்பெறும் வானதி ஸ்ரீனிவாசன் சமீப காலமாக அதுவும் தமிழக பாஜக தலைவராக இவர் இருக்கலாம் என பேச்சுக்கள் எழுந்ததும் பொது வெளியில் செய்தியாளர்களுக்கு அதிகம் பேட்டி கொடுத்து வருகிறார். 
 
சமீபத்தில் கோவில்களுக்கு சென்றுவிட்டு வந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரது பேச்சு தமிழிசை போன்று இருந்ததாக கூறப்படுகிறது. வானதி ஸ்ரீனிவாசன் பேசியதாவது, 
 
பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் மாமல்லபுரத்துக்கு வருவதால், அது உலகப் புகழ்மிக்க சுற்றுலாத் தலமாக விரைவில் மாறும். விக்கிரவாண்டி, நாங்குநேரியில் நடக்க உள்ள இடைத்தேர்தலில் நாங்கள் அதிமுகவுக்கு ஆதரவளிக்கிறோம். 
 
அதிமுகவுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்வார்கள். இடைத்தேர்தல் நடக்கும் 2 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி, அமோக வெற்றி பெறும்.
 
தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் கட்சியாக பாஜக உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளிவரட்டும். இதனால், உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க நாங்களும் ஆர்வமாக உள்ளோம். விரைவில் தமிழ்நாடு பாஜக தலைவர் யார் என்பதைக் கட்சியின் தலைமை அறிவிக்கும் என பேசியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு? மும்முறம் காட்டும் தேர்தல் ஆணையம்!!