Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆந்திராவில் புதிய தலைநகர் எப்போது செயல்பாட்டிற்கு வரும்? முதல்வர் தகவல்

ஆந்திராவில் புதிய தலைநகர் எப்போது செயல்பாட்டிற்கு வரும்? முதல்வர்  தகவல்
, வியாழன், 20 ஏப்ரல் 2023 (21:39 IST)
செப்டம்பர் மாதம் முதல் ஆந்திர மாநில தலைநகராக விசாசபட்டினம் செயல்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் சில ஆண்டுகளுக்கு முன் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, தெலுங்கானா தனி மாநிலமாக உருவானது.

அதன்பின்னர், இரு மாநிலத்திற்கும் பொதுவான மா நிலமாக ஐதராபாத் இருந்த நிலையில்,  தெலுங்கு தேசம் கட்சி விஜயவாடா அருகிலுள்ள அமராவதியை ஆந்திர மாநிலத் தலைநகராக அறிவித்தது.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில், சட்டமன்றம், தலைமைச் செயலகம் அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

பின்னர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், அமராவதியை சட்டமன்ற தலைநகராகவும்,  நிர்வாக  தலைநகராக, தொழில் நகரமான  விசாகபட்டினமும்,  நீதிமன்ற தலை நகராக கர்நூலும் இருக்குமென்று அறிவித்தனர்.

இந்த நிலையில், நேற்று ஸ்ரீகாளகுளத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆந்திரம் மாநில தலைநகரராக விசாகப்பட்டினம் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தின் புதிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவா? சவுக்கு சங்கர் ட்விட்டால் பரபரப்பு..!