Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு வந்தால்....கெடிலம் ஆற்றின் நிலை வராமல் தடுக்க சாமானிய மக்கள் கட்சி கோரிக்கை

amaravathi
, வெள்ளி, 15 ஜூலை 2022 (22:04 IST)
தொடரும் மணல் கொள்ளை அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு வந்தாக் கெடிலம் ஆற்றின் நிலை வராமல் தடுக்க சாமானிய மக்கள் கட்சி கோரிக்கை.
 
மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இந்நிலையில் எந்த நேரமும் அமராவதி அணை திறந்து விடும் நிலையில் உள்ளது. இந்நிலையில், அரசின் அனுமதி இல்லாமலும், உயர் நீதிமன்ற உத்திரவினையும் மீறி, திருட்டுத்தனமாக இருசக்கர வாகனத்தில் சாக்குப் பைகள் மூலமாகவும், மாட்டு வண்டிகளை ஆற்றில் இறக்கியும் ஆற்றில் ஆழமான பள்ளம் போல் தோண்டி, அதில் மணல் அள்ளி சட்ட விரோத செயல்களில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இது போன்ற சட்டவிரோத செயல்களினால் ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் வரும் காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, அந்த குழிகள், இளம் மணல் ஏற்பட்டு, புதைக்குழிகளாகவும், சுழல்நீர் உருவாகும் விதமும் ஏற்படும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர், கடலூர் கெடிலம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தமிழக அளவில் பெரும்  சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அந்த சம்பவம் போல் கரூர் அமராவதி ஆற்றில் ஏற்படாத வண்ணம் நீர்நிலைகளில் பொதுமக்கள், சிறுவர்கள் இறங்காத நிலையில் உயிர்சேதம் ஏற்படாத வண்ணம் மாவட்ட நிர்வாகம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், சட்டவிரோத மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது, தக்க நடவடிக்கை எடுக்க சாமானிய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக அமராவதி ஆற்றில் சட்ட விரோதமாக குழிகள் பறித்து அதிலிருந்து மணல் எடுக்கப்பட்ட இடங்களையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, சமூக நல ஆர்வலர் ரஹ்மான் உடனிருந்தார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குரூப் 1 நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியீடு