காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசு மீது தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெறவுள்ளது. இன்று நடக்கும் விசாரணையில் என்னென்ன நடக்க வாய்ப்பு இருக்கின்றது என்பது குறித்த சட்டவல்லுனர்கள் கூறியதாவது:
1. ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கொடுக்கலாம்
2. விளக்கம் கொடுத்த பின்னர் தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசுக்கு அவகாசம் கொடுக்கலாம்
3. ஆனால் அதே நேரத்தில் இந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கலாம்.
4. மேலும் ஸ்கீம் என்பதை எப்படி அமைக்கலாம் என்று மத்திய மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டு அதன்பின் வழக்கு ஒத்தி வைக்கப்படலாம்
மேற்கண்ட நான்கில் ஒன்று இன்று நடக்க வாய்ப்பு இருப்பதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் என்ன நடக்கும் என்பது இன்னும் ஒருசில நிமிடங்களில் தெரிந்துவிடும்