Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி சான்றிதழில் மோடியின் புகைப்படம் நீக்கம்! – மேற்கு வங்கம் முடிவு!

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (09:42 IST)
மேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறையும் இருந்து வருகிறது.

இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் சில மாநிலங்கள் பிரதமர் மோடியின் படத்தை நீக்கி வருகிறது. முன்னதாக பஞ்சாப், ராஜஸ்தான் மாநில அரசுகள் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கிய நிலையில் தற்போது மேற்கு வங்க அரசும் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குக்மா? நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்..!

மேடையில் உற்சாக நடனம்.! பிரதமர் மோடியின் AI வீடியோ வைரல்..!

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளை லட்சாதிபதி ஆக்குவோம்: ராகுல் காந்தி

உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம்.. 5ஜியை விட 20 மடங்கு வேகம்..!

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல்.! மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments