காணொலி ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியை காக்க வைத்த தலைமை செயலரை பணிநீக்கம் செய்யமுடியாது என முதல்வர் மம்தா பானர்ஜி மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் யாஸ் புயலால் மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்த பிரதமர் மோடி காணொலி வாயிலாக காத்திருந்த நிலையில் மேற்கு வங்க தலைமை செயலர் அதற்கு பதிலளிக்க காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.
தலைமை செயலரின் செயலை கண்டித்து அவரை பணிநீக்கம் செய்ய மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் கொரோனாவால் மாநிலம் இக்கட்டான சூழலில் உள்ள நிலையில் தலைமை செயலரை பணிநீக்கம் செய்ய முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா மறுத்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.