மேற்கு வங்க மாநிலம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறி வருகிறது என அந்த மாநிலத்தின் ஆளுநர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சற்றுமுன் மேற்குவங்க ஆளுநர் ஆனந்த போஸ் இது குறித்து கூறிய போது மேற்கு வங்க மாநிலம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் அல்ல என்றும் மேற்கு வங்கத்தின் பெண்களை தோல்வி அடையச் செய்துள்ளனர் என்றும் மேற்கு வங்க அரசு பெண்களை பாதுகாக்க தவறி விட்டது என்றும் கூறியுள்ளார்.
பெண்களுக்கு மரியாதைக்குரிய இடத்தை பெற்று தர வேண்டிய மேற்கு வங்கம் மீண்டும் பழங்கால நிலையை கொண்டு வர வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறது என்றும் இந்த பிரச்சனையில் அக்கறையற்ற அரசு உருவாக்கி உள்ள குண்டர்கள் காரணமாக பெண்கள் அச்சத்தில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மம்தா பாலாஜி மீது நம்பிக்கை இல்லை என்றும் கொலை செய்யப்பட்ட மருத்துவரின் பெற்றோர் தெரிவித்ததற்கு அவர்களின் உணர்வை மதிப்பதாகவும் சட்டம் தனது கடமையை செய்யும் என்றும் ஆளுநர் ஆனந்த போஸ் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.