Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவங்கக்கூட இனிமே இருக்க முடியாது: பாஜகவுக்கு கும்பிடு போட்ட நடிகை!

Advertiesment
அவங்கக்கூட இனிமே இருக்க முடியாது: பாஜகவுக்கு கும்பிடு போட்ட நடிகை!
, திங்கள், 2 மார்ச் 2020 (09:36 IST)
டெல்லி வன்முறை சம்பவத்திற்கு பாஜக தலைவர்களே காரணம் என குற்றம்சாட்டிய பிரபல நடிகை பாஜகவிலிருந்து விலகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் பிரபல டிவி சீரியல் நடிகையாக இருப்பவர் சுபத்ரா முகர்ஜி. இவர் கடந்த 2013ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். சமீபத்தில் டெல்லியில் சிஏஏ போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் பலர் உயிரிழந்தனர். பல மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர். இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கலவரம் உருவாகும் முன்னரே வன்முறையை தூண்டும் வகையில் பாஜக –வை சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் ஆகியோர் பேசியதாக கூறப்படுகிறது. டெல்லி கலவரம் தொடர்பாக 200க்கும் மேற்பட்ட எஃப்.ஐ.ஆர்-களை பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் கபில் மிஸ்ரா மற்றும் அனுராக் தாகூர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. பாஜக தலைமையும் அவர்களது வன்முறை பேச்சு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுபத்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இதுபோன்ற ஆட்கள் இருக்கும் கட்சியில் இருக்க எனக்கு விருப்பமில்லை என தெரிவித்து பாஜகவிலிருந்து விலகியுள்ளார் சுபத்ரா முகர்ஜி. பாஜக உறுப்பினரே பாஜகவினர் வன்முறையாக பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்ரோல் – டீசல் விலை குறைவு: இன்றைய நிலவரம்!