மாடுகளுக்கு வார விடுமுறை விடும் கிராம மக்கள்: ஜார்க்கண்டில் ஒரு விநோதம்..!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (07:42 IST)
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் மாடுகளுக்கு வார விடுமுறை விடுவதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லடேஹர் என்ற பகுதியில் உள்ள 12 கிராமங்களில் பசுக்கள், எருமை மாடுகள் ஆகியவற்றுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை அளிக்கும் பழக்கத்தை கடந்த பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகின்றனர். தினந்தோறும் மாடுகளிடம் பால் கறப்பது மற்றும் வேலை வாங்குவது காரணமாக அவை சோர்ந்து போகின்றன என்றும் எனவே வாரம் ஒரு முறை விடுமுறை அளித்து வருவதாகவும் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
12 கிராமங்களில் உள்ள மாடுகளுக்கு வாரம் ஒரு முறை ஓய்வு அளிக்கும் வழக்கம் இந்த பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது என்றும் அன்றைய தினம் மாடுகளிடம் எந்தவித வேலையும் வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர். 
 
எத்தனை அவசரமாக இருந்தாலும் விடுமுறை தினத்தில் மாடுகளை வேலை வாங்குவதில்லை என்றும் வாரம் ஒரு நாள் ஓய்வு எடுப்பதால் மாடுகள் புத்துணர்ச்சி அடைகின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments