Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூன்று ஆண்டுகளில் 21 ஆயிரம் கோடி வருமானம்! கலக்கும் இந்திய யூட்யூபர்கள்!

Advertiesment
Indian Youtubers

Prasanth Karthick

, வெள்ளி, 2 மே 2025 (09:22 IST)

இந்தியாவில் இருக்கும் யூட்யூப் க்ரியேட்டர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் 21 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்திருப்பதாக யூட்யூப் தெரிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியாவில் ஸ்மார்ட்போன் வசதியும், இணைய வசதியும் பெருகிவிட்ட நிலையில் பலரும் யூட்யூப் சேனல் தொடங்குவதை குடிசைத் தொழில் போல ஆரம்பித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் கல்வி, பொழுதுபோக்கு, சமையல் என ஒவ்வொரு துறை சார்ந்தும் சில சேனல்கள் செயல்பட்டு வந்தன. ஆனால் குறைந்த விலையில் மைக், கேமரா கிடைப்பதால் புற்றீசல் போல தினம்தோறும் ஆயிரக்கணக்கான யூட்யூபர்கள் இந்தியாவில் உருவாகி வருகின்றனர். இதில் பெரும்பாலும் ஃபுட் வ்லாக், ட்ராவல் வ்லாக் செய்பவர்களே அதிகம்.

 

இந்நிலையில் சமீபத்தில் இந்திய யூட்யூபர்களின் வருமானம் குறித்து பேசிய யூட்யூப் சிஇஓ நீல் மோகன், இந்தியாவில் இருக்கும் யூட்யூப் க்ரியேட்டர்கள், ஆர்ட்டிஸ்டுகள், மீடியா கம்பெனிகள் உள்ளிட்டவற்றிற்கு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் வருவாயாக ரூ.21,000 கோடியை வழங்கியுள்ளதாக கூறியுள்ளார். இதிலிருந்தே இந்தியாவில் யூட்யூப் எவ்வளவு பெரிய வருமானமாக இருக்கிறது என்பது தெரிய வருகிறது.

 

ஆனால் இவற்றில் பெரும்பாலும் வருமானம் ஈட்டுபவர்கள் மீடியா கம்பெனிகளும், ஒரு சில இன்ப்ளூயன்சர்களும்தான். எந்த வித திட்டமிடலும் இல்லாமல் மனம் போன போக்கில் வீடியோ போடும் சேனல்கள் வருமானம் ஈட்ட முடியாமல் காணமல் போவதும் யூட்யூபில் அதிகமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீவிரவாதிகள் இன்னமும் காஷ்மீரில்தான் பதுங்கி இருக்கிறார்கள்? - என்.ஐ.ஏ எச்சரிக்கை!