இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையே நடந்து வரும் போரில் தாங்களும் கலந்து கொள்ள அனுமதி கோரியுள்ளார் இந்து சாமியார் ஒருவர்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேலை ஹமாஸ் தாக்கியதை தொடர்ந்து ஹமாஸின் ஆக்கிரமிப்பு பகுதியான காசா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்பிற்கு ஈரான் ஆதரவு தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளன.
இந்நிலையில் ஹமாஸை எதிர்த்து போர் செய்ய நாங்களும் வருகிறோம் என உத்தர பிரதேச சாமியார் நரசிங்கநாத் பேசியுள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிற்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர், தானும் தன் 1000 சீடர்களும் இஸ்ரேல் வந்து ஹமாஸ்க்கு எதிராக போர் செய்ய தயாராக உள்ளதாகவும், தாங்கள் இஸ்ரேல் வரவும், போரில் பங்கேற்கவும் அந்நாட்டு பிரதமர் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.