Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தண்ணீர் பைப்பை வைத்து வெடிக்கும் ராக்கெட்! - ஹமாஸ் வெளியிட்ட மேக்கிங் வீடியோ!

Advertiesment
Hamas
, வெள்ளி, 13 அக்டோபர் 2023 (15:35 IST)
இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ராக்கெட்டுகளை தயார் செய்த விதம் குறித்த மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.



இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் நிகழ்ந்து வரும் நிலையில் சமீபத்தில் பாலஸ்தீன ஆதரவு அமைப்பு ஹமாஸ் நடத்திய தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இஸ்ரேல் மீது சுமார் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசி தாக்கியதுடன், இஸ்ரேல் எல்லைக்குள் தரை வழி, வான் வழி க்ளைடர்கள் வழியாகவும் நுழைந்து ஏராளமானோரை சுட்டுக் கொன்றதுடன், பலரை பணைய கைதிகளாக கடத்தி சென்றனர்.

இதற்கு பதிலடியாக ஹமாஸ் ஆக்கிரமிப்பு பகுதியான காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது. ஹமாஸ் அமைப்பு எப்படி இத்தனை ஆயிரம் வெடிக்கும் ராக்கெட்டுகளை தயார் செய்தது என்று பலரும் யோசித்து வந்த நிலையில் ஹமாஸ் அமைப்பே ராக்கெட் தயாரிக்கும் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஆழ்குழாய் தண்ணீர் பைப்புகளை உடைத்து எடுத்து அதில் வெடிமருந்துகளை நிரப்பி ராக்கெட்டுகளை தயார் செய்துள்ளனர். மேலும் ஆழ்கடலில் குதித்து மூழ்கிய கப்பல்கள், நீர்மூழ்கிகளில் இருந்த செயல்படாத வெடிகுண்டுகளை கண்டெடுத்து அதையும் தாக்குதலுக்கு பயன்படுத்தியுள்ளனர். ஆயுதங்களை சேர்க்கவே நீண்ட காலம் திட்டமிட்டிருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓவர் ஹீட்.. ஸ்க்ரீன் பிரச்சினை.. என்னா போன் இது! – அப்செட் ஆன iPhone 15 பயனாளர்கள்!