Webdunia - Bharat's app for daily news and videos

Install App

21 சிறுவர், சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: அரசுப் பள்ளி வாா்டனுக்கு மரண தண்டனை..!

Siva
வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (11:25 IST)
21 சிறுவர், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி வார்டனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, அருணாச்சல பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு அரசு மாணவிகள் விடுதியில், 15 சிறுமிகள் உள்பட 21 மானவ, மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பள்ளி வார்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. அதன் படி, பள்ளி வார்டனுக்கு மரண தண்டனையும், மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை, வார்டன், இரண்டு ஆசிரியர்களுடன் சேர்ந்து, 15 சிறுமிகள் உட்பட 21 சிறார்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தது குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளிடம் இது பற்றி வெளியே கூறினால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இரண்டு சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் இது குறித்து கூறியதையடுத்து, பள்ளி வார்டன் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணை முடிந்து, தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, வார்டனுக்கு தூக்கு தண்டனையும், ஹிந்தி ஆசிரியர் மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

55 வயது பெண்ணுக்கு பிறந்த 17வது குழந்தை.. அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை..!

போலி திருமணம் செய்து மோசடி செய்த கும்பல்.. கூண்டோடு மடக்கி பிடித்த போலீஸ்..!

தமிழகத்தில் பீகாரிகள் தாக்கப்பட்டப்போ எங்க போனீங்க ஸ்டாலின்? - பிரசாத் கிஷோர் தாக்கு!

சலூன் கடைக்காரருடன் பைக்கில் சென்ற மனைவி.. துப்பாக்கியால் சுட்ட கணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

தங்கம் விலை 3வது நாளாக தொடர் ஏற்றம்.. ரூ.10,000ஐ நெருங்குகிறது ஒரு கிராம் தங்கம்..!

அடுத்த கட்டுரையில்