”தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வுக்கு செல்லமாட்டோம்” சன்னி வக்ஃபூ வாரியம்

Arun Prasath
சனி, 9 நவம்பர் 2019 (17:38 IST)
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வுக்கு செல்லமாட்டோம் என சன்னி வக்ஃபூ வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.

அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததோடு, மசூதி கட்டுவதற்கு இஸ்லாமியர்களுக்கு அவர்கள் விருப்பப்பட்ட இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என உத்திர பிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தின் சன்னி வக்ஃபூ வாரியத்தின் தலைவர் சுஃபர் ஃபரூகி, ”அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்பதால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனுவை நாங்கள் தாக்கல் செய்ய மாட்டோம்” என கூறியுள்ளார்.

மேலும், ”வேறு அமைப்புகள் யாராவது மறுசீராய்வு செய்வோம் என கூறினால், அது சன்னி வக்ஃபூ வாரியத்தின் கருத்து அல்ல” எனவும் ஃபரூகி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments