அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், அயோத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17 ஆம் தேதி ஓய்வு பெறும் நிலையில், அதற்குள் அயோத்தியில் சர்ச்சைக்குறிய நிலம் குறித்தான வழக்கில், இறுதி தீர்ப்பு வெளியிடப்படும் என செய்திகள் வெளியாகின.
இதனை தொடர்ந்து அயோத்தி உள்ளிட்ட பதற்றம் நிலவும் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது அயோத்தி உள்ளிட்ட பதற்றம் நிலவும் பகுதிகளில் 4 ஆயிரத்திற்கும் மேலான துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தீர்ப்பு இரு தரப்பினரில் யாருக்கு சாதகமாக வந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ள நிலையில் வெற்றி மற்றும் துக்க ஊர்வலத்திற்கு உத்தர பிரதேச மாநில அரசு தடை பிறப்பித்துள்ளது.
மேலும் இரு தரப்பை சார்ந்த அமைப்புகள் ”உச்சநீதிமன்ற தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வோம்” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.