ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதால் இந்தியாவுக்கு 50% வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது, இரு நாடுகளின் உறவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்ப்பை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தனிப்பட்ட முறையில் ஆலோசனை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
"டிரம்ப்பை எப்படி கையாள்வது என்பது குறித்து பிரதமர் மோடிக்கு நான் சில ஆலோசனைகளை வழங்குவேன். தனிப்பட்ட முறையில் அதைச் செய்வேன்," என்று நெதன்யாகு கூறினார்.
மேலும், விரைவில் இந்தியாவுக்கு பயணம் செய்யும்போது மோடியுடன் இது குறித்து விரிவாக விவாதிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் நலன்களை கருத்தில் கொண்டு, இந்த வரி பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கு இடையே சுமூகமான தீர்வு ஏற்பட்டால் அது இஸ்ரேலுக்கும் நன்மை பயக்கும் என்றும் அவர் கூறினார்.