Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொத்தம் 57 ஆயிரம் கோடி... கட்டி முடிக்க 15 வருஷம் டைம் கேட்கும் வோடபோன்!!

Webdunia
வியாழன், 27 பிப்ரவரி 2020 (12:00 IST)
மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை 15 ஆண்டுகளில் தவணை முறையில் செலுத்த வாய்ப்பளிக்குமாறு வோடபோன் கோரியுள்ளது. 
 
மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகைகளை உடனடியாக செலுத்துமாறு ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட 15 தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி அறிவிப்புன் ஒன்றை வெளியிட்ட தொலைத்தொடர்பு துறை நள்ளிரவுக்குள் நிலுவை தொகையை செலுத்த சொல்லி உத்தரவிட்டது. ஆனால் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் நள்ளிரவுக்கு அவ்வளவு தொகையை செலுத்த முடியவில்லை.
 
15 தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இருந்து அரசுக்கு வர வேண்டிய நிலுவை தொகை 1 லட்சத்து 47 ஆயிரம் கோடி ஆகும். இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் கடந்த 17 ஆம் தேதி அரசுக்கு 2500 கோடி ரூபாய் நிலுவை தொகையை செலுத்தியது. அதனைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் நிலுவை தொகையில் 3500 கோடி ரூபாயை செலுத்தியுள்ளதாக் தெரிகிறது. 
 
இந்நிலையில், அரசுக்கு செலுத்த வேண்டிய மீதத்தொகையை அடுத்த 15 ஆண்டுகளில் தவணை முறையில் செலுத்த வாய்ப்பளிக்குமாறும் வோடபோன் கோரிக்கை விடுத்துள்ளது. அதோடு, மொத்த வருவாயில் 8 விழுக்காடாக உள்ள கட்டணத்தை 3 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
 
வோடபோன் நிறுவனம் அரசுக்கு 57 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனமழை எதிரொலி: இன்று நடக்கவிருந்த என்னென்ன தேர்வுகள் ஒத்திவைப்பு?

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments