Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10,000 கோடியை செட்டில் பண்ணிய ஏர்டெல்: இன்னும் 25,586 கோடி பாக்கி இருக்கே...!!

Advertiesment
10,000 கோடியை செட்டில் பண்ணிய ஏர்டெல்: இன்னும் 25,586 கோடி பாக்கி இருக்கே...!!
, திங்கள், 17 பிப்ரவரி 2020 (15:58 IST)
நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து ரூ.10 ஆயிரம் கோடி தொகையை அரசுக்கு செலுத்தியுள்ளது ஏர்டெல் நிறுவனம். 
 
வோடபோன் ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட 15 தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகைகளில் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கியை ஜனவரி 23 ஆம் தேதிக்குள்  செலுத்த வேண்டும் என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 
 
ஆனால், கெடு தேதி முடிந்தும் அப்பணம் செலுத்தப்படாத நிலையில், வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் நள்ளிரவுக்குள் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி செலுத்துமாறு  அதிரடியாக உத்தரவிட்டது. 
 
இதனிடையே ஏர்டெல், அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையில் ரூ.10 ஆயிரம் கோடியை பிப்.20 ஆம் தேதிக்குள், மீதமுள்ள தொகையை மார்ச் 17 ஆம் தேதிக்குள் செலுத்துவதாக தெரிவித்திருந்தது. அதன்படி  ரூ.10 ஆயிரம் கோடியை ஏர்டெல் செலுத்தியுள்ளது. 
 
இதை தவிர்த்து ஏர்டெல் இன்னும் ரூ.25,586 கோடி செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், வோடபோன் நிறுவனம் பணம் செலுத்துவது குறித்தும், அவகாசம் கேட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அழகு சாதனப் பொருட்களின் விளம்பரம் – இனி அடித்து விட முடியாது!