Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவங்க பி.டி.உஷாவா? நான் சானியா மிர்ஸான்னு நினைச்சேனே!? – வைரல் போட்டோ

Webdunia
திங்கள், 2 செப்டம்பர் 2019 (16:13 IST)
ஆந்திராவில் சானியா மிர்ஸா போட்டோவை போட்டு பி.டி.உஷா என்று எழுதி மக்களை குழப்பி விட்டிருக்கிறார்கள் விளையாட்டு விழா கொண்டாடியவர்கள்.

ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டிணத்தில் தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடும் பொருட்டு உலக அளவில் புகழ்பெற்ற இந்திய விளையாட்டு வீரர்களின் புகைப்படங்களயும், அவர்களை பற்றிய விவரங்களையும் விளம்பர பலகையாக நகரின் முக்கியமான பகுதிகளில் வைத்திருக்கிறார்கள்.

அதில் விசாகப்பட்டிணம் கடற்கரை பகுதி அருகே வைக்கப்பட்ட பதாகை ஒன்றில் டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்ஸாவின் புகைப்படத்தை போட்டு பெயர் பி.டி.உஷா என்று போட்டிருக்கிறார்கள். விளையாட்டு பகுதியில் டென்னிஸ் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பி.டி.உஷா ஓட்ட பந்தய வீராங்கனை ஆவார்.

இந்த பெயர் குழப்பம் கொண்ட போஸ்டரை யாரோ புகைப்படம் எடுத்து இணையத்தில் உலாவ விட்டுள்ளனர். தெலுங்கு திரைப்பட பிண்ணனி பாடகியான ஸ்மிதா அதை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.  அதற்கு அவரது ரசிகர் ஒருவர் “இவங்க பி.டி.உஷாவா? நான் இத்தனை நாளா சானியா மிர்ஸான்னு நினைச்சிக்கிட்டு இருந்தேனே?” என நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments