Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவினர் போலீஸ் வாகனத்திற்கு தீ வைக்கும் வீடியோ ...

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (16:11 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்ட  நிலையில், போலீஸார் வாகனத்திற்கு தீவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

 
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான  திரிணாமுல் காங்கிரச் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளதாகக் கூறி பாஜகவினர் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில், நேற்று, போராட்டத்தில் பங்கேற்க மா நிலம் முழுவதிலும் இருந்து பலரும் பாஜகவினர் கலந்துகொண்டு, தலைமைச் செயலகம் நோக்கி அவர்கள் பேரணையாகச் சென்றனர்.

அப்போது, ஹவ்ரா பகுதியில் அவர்களை நிறுத்திய போலீஸார் பாஜககவினரை கைது செய்தனர். இதை மீறி அவர்கள் செல்லமுயன்றபோது,  போலீஸார் அவர்கள் மீது  தண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டு, போலீஸ் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது.
 

ALSO READ: மே.,வங்கத்தில் பாஜகவினர் நடத்திய பேரணியில் வன்முறை...போலீஸார் வாகனம் தீ வைத்து எரிப்பு!
 
இதில் ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்தார், எனவே பாஜக தலைவர்களை போலீஸார் கைது செய்தனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில் நேற்று பாஜகவினர் சிலர் சாலை ஓரம் நின்றிருந்த போலீஸார் வாகனத்திற்கு தீ வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதற்கு எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments