Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மே.,வங்கத்தில் பாஜகவினர் நடத்திய பேரணியில் வன்முறை...போலீஸார் வாகனம் தீ வைத்து எரிப்பு!

Advertiesment
Fire
, செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (22:30 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு, போலீஸ் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது.

மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான  திரிணாமுல் காங்கிரச் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளதாகக் கூறி பாஜகவினர் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதாக அறிவித்ததனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் பங்கேற்க மா  நிலம் முழுவதிலும் இருந்து பலரும் பாஜகவினர் கலந்துகொண்டு, தலைமைச் செயலகம் நோக்கி அவர்கள் பேரணையாகச் சென்றனர்.

அப்போது, ஹவ்ரா பகுதியில் அவர்களை நிறுத்திய போலீஸார் பாஜககவினரை கைது செய்தனர். இதை மீறி அவர்கள் சென்ற முயன்றபோது,  போலீஸார் அவர்கள் தண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டு, போலீஸ் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது.

இதில் ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்தார், எனவே பாஜக தலைவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷ்யா கைப்பற்றிய பகுதிகள் மீட்பு -உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி