Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துணை குடியரசுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜகதீப் தன்கருக்கு ஓய்வூதியப் பலன்கள் கிடைக்குமா?

Advertiesment
ஜகதீப் தன்கர்

Mahendran

, வியாழன், 24 ஜூலை 2025 (10:20 IST)
துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ள நிலையில் பதவிக்காலத்தின் பாதியில் ராஜினாமா செய்ததால் ஓய்வூதிய பலன்கள் கிடைக்குமா? என்ற கேள்விக்கு ஆம், கிடைக்கும் என்ற பதிலை சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஒரு துணை குடியரசுத் தலைவர் இரண்டு ஆண்டுகள் பதவி வகித்த பிறகு ஓய்வு பெற்றால், அவருக்கு ஓய்வூதியம் மற்றும் பிற வசதிகள் வழங்கப்படும். எனவே, தன்கருக்கு ஓய்வூதிய பலன்கள் கண்டிப்பாக கிடைக்கும்.
 
துணை குடியரசுத் தலைவர் தன்கருக்குக் கிடைக்கும் ஓய்வூதியப் பலன்கள் என்னென்ன?
 
விதிகளின்படி, ஓய்வுபெற்ற துணை குடியரசுத் தலைவர் தனது அலுவலக  செலவுகளுக்காக ரூ. 60,000 வழங்கப்படும்.
 
ஓய்வுபெற்ற துணை குடியரசு தலைவருக்கு ஒரு வகை-VIII பங்களா ஒதுக்கப்படும்.
 
வாழ்நாள் முழுவதும் இந்தியாவில் எந்த இடத்திலும், தனது விருப்பப்படி ஒரு நிலையான குடியிருப்பில் வாடகை இல்லாமல், தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டணம் இல்லாமல் அவர் வீட்டை பயன்படுத்தி கொள்ளலாம். 
 
தனது மனைவி அல்லது ஒரு துணை அல்லது உறவினருடன், "இந்தியாவில் எங்கும் இலவசமாக, விமானம், ரயில் அல்லது கப்பல் மூலம் மிக உயர்ந்த வகுப்பில்" பயணம் செய்யலாம்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேசிய நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்.. விமானத்தில் பயணம் செய்தவர்கள் பலி..!