இந்திய தொலைதொடர்பு நெட்வொர்க் சேவை நிறுவனமான வோடபோன் ஐடியா தனது பெயரை மாற்றியதை தொடர்ந்து இந்தியா முழுவதும் தனது சேவையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வர உள்ளது.
இந்தியாவில் ஜியோவின் வருகையை தொடர்ந்து பல நெட்வொர்க் நிறுவனங்கள் பலத்த வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஏர்டெல் நிறுவனம் ஜியோவுக்கு நிகராக சலுகைகள் வழங்கி தாக்குப்பிடித்து வருகிறது. இந்நிலையில் சரிவை சந்தித்த வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஒன்றிணைந்த வோடபோன், ஐடியா நிறுவனத்தின் பெயர் வீ என மாற்றப்பட்டு புதிய லோகோவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்தக்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 3ஜி சேவைகளை 4ஜி சேவைகளாக மாற்ற வீ பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் 2ஜி சேவையின் மூலமாக வாய்ஸ் கால் சேவையை மட்டும் வழங்கி வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்ளவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.