கர்நாடக முன்னாள் முதல்வர், வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்த நிலையில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததை அடுத்து அரசியலில் இருந்து விலகுகிறேன் என அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி கர்நாடக மாநில முன்னாள் முதல்வராகவும் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சிக்கபள்ளாப்பூர் என்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த வீரப்ப மொய்லி, அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட காங்கிரஸ் தலைமையிடம் வாய்ப்பு கேட்டிருந்தார்.
ஆனால் கட்சி மேலிடம் அவருக்கு சீட்டு வழங்காததை அடுத்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய வீரப்ப மொய்லி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்
வேறு கட்சியில் சேர மாட்டேன் என்றும் காங்கிரஸ் தான் எனக்கு அமைச்சர் பதவி முதலமைச்சர் பதவியை கொடுத்தது என்றும் நான் என்றைக்கும் உண்மையான காங்கிரஸ்காரனாகவே இருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.