பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் சமீபத்தில் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருக்கும்போது வறுத்த மீன் சாப்பிட்ட வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட நிலையில் ராம நவமி தினத்தில் மீன் சாப்பிடுவதா? என நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ராம நவமி தினம் கொண்டாடப்பட்ட தினத்தில் மீன் சாப்பிடும் வீடியோவை தேஜஸ்வி யாதவ் பகிர்ந்ததை பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர்
தேர்தல் நேரத்தில் வாக்குகளை பெறுவதற்கு மற்றும் சனாதன வேடம் கொண்டுள்ளதாகவும் மற்ற நேரங்களில் சனாதன தர்மத்திற்கு எதிராக செயல்படுவதாகவும் அவரை பாரதிய ஜனதா கட்சி விமர்சனம் செய்துள்ளது
தேஜாஸ்ரீ யாதவ் ஒரு சீசன் சனாதனவாதி என்றும் அவரது தந்தை ஆட்சியில் இருந்த போது தான் வங்கதேசத்திலிருந்து பலர் ஊடுருவி வந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்த தேஜஸ்வி அந்த வீடியோவை ராம நவமி தினத்தில் பகிர்ந்து இருந்தாலும் உண்மையில் நான் மீன் சாப்பிட்டது ஏப்ரல் எட்டாம் தேதி என்றும் கூறியுள்ளார்