Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு: மேல்முறையீடு செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (11:17 IST)
ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி பகுதி சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியதை அடுத்து தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உத்தரவிட்டது 
 
இந்த நிலையில் தமிழக அரசின் ஆணையை எதிர்த்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது 
 
இந்த வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்க உள்ளதாக ஏற்கனவே நேற்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தீர்ப்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை என்ற தமிழக அரசின் ஆணை தொடரும் என்று தீர்ப்பு அளித்ததோடு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது 
 
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அடுத்து தூத்துகுடி மக்கள் வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை தொடரும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் இது ஒரு மனு விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியில் இருந்து அவர தூக்குங்க.! நாட்டுக்கு நல்லது நடக்கும்..! இளங்கோவன் விமர்சனம்..!!

மனைவியுடன் வீடியோ கால் பேசி முடித்தவுடன் தூக்கில் தொங்கிய வழக்கறிஞர்.. சென்னையில் அதிர்ச்சி..!

அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உலக முதலீட்டாளர்களை சந்திக்க என தகவல்..!

சென்னை கோயம்பேட்டில் மேற்குவங்க தீவிரவாதி. அதிரடியாக கைது செய்த போலீஸ்..

குறுவை சாகுபடி பாதிப்பு.! இபிஎஸ் வைத்த முக்கிய கோரிக்கை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments