Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி! - கொரோனா இல்லை என விளக்கம்

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (11:16 IST)
சமீபத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மத்திய அமைச்சர் அமித்ஷா குணமடைந்த நிலையில் தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சில நாட்கள் முன்னர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் மூன்று முறை சோதனை செய்யப்பட்டு அவருக்கு கொரோனா இல்லை என கூறப்பட்டதால் வீடு திரும்பினார். இதனால் ராமர் கோவில் அடிக்கல் நாட்டும் விழாவில் கூட அமித்ஷா கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் குணமாகி வீடு திரும்பிய அமித்ஷாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதேசமயம் அவருக்கு கொரோனா இல்லை என்றும் சில நாட்களாக தொடர்ந்த உடல்வலி போன்ற பிரச்சினைகளால் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments